\
விபத்தால் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்தது! - பெங்களூருவில் பரபரப்பு

விபத்தால் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்தது! - பெங்களூருவில் பரபரப்பு

விபத்தால் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்தது! - பெங்களூருவில் பரபரப்பு
Published on

பெங்களூருவில் சிறு சாலை விபத்தால் ஏற்பட்ட சண்டை, கொலையில் முடிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் ஜெய் மாருதி நகரைச் சேர்ந்தவர் சந்துரு (22). கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர் சைமன் ராஜுடன் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஹல்லேகுடஹல்லி பகுதியில் அவர்களின் மோட்டார் சைக்கிள் வந்த போது, ஷாகித் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஷாகித் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அங்கிருந்த அவரது நண்பர்கள் அவருக்கு ஆதரவாக வந்துள்ளனர். அப்போது, ஷாகித் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்துருவையும், சைமனையும் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனில்லாமல் சந்துரு உயிரிழந்தார். சைமன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷாகித் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com