\
குரங்குக்குச் சோறு ஊட்டிய தாய் : மனிதத்தை உணர்த்தும் வீடியோ..!

குரங்குக்குச் சோறு ஊட்டிய தாய் : மனிதத்தை உணர்த்தும் வீடியோ..!

குரங்குக்குச் சோறு ஊட்டிய தாய் : மனிதத்தை உணர்த்தும் வீடியோ..!
Published on

மேற்கு வங்கத்தில் குரங்குக்கு ஒரு பெண் தனது கையால் உணவை ஊட்டிவிடும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மயுரேஸ்வர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சந்த் தாஸ். இவர் அண்மையில் ஒரு வீடியோவை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் தாஸின் தாயார், தங்கள் வீட்டிற்கு வந்த குரங்கிற்கு உணவளித்துக்கொண்டிருந்தார்.

அந்தக் குரங்கு எந்தவித தயக்கமும் இன்றி அவர்கள் வீட்டிலிருந்து மேசையின் மீது அமர்ந்திருந்தது. அப்போது தாஸின் தாயார், தனது பிள்ளைக்கு உணவு ஊட்டுவது போல, பாசத்துடன் குரங்கிற்கு உணவளித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள இந்த வீடியோ, 20 ஆயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் குரங்குக்கு உணவளித்த பெண்ணின் தாய்மை குணத்தைப் போற்றியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com