பாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்

பாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்

பாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்
Published on

மேற்கு வங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர். 

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் விரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்தவகையில் மேற்குவங்கத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களான பாபுல் சுப்ரியோ மற்றும் தேபஸ்ரீ சௌதிரி பதவியேற்றனர். அப்போது பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை எழுப்பினர். 

இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தாக்கும் விதமாக அமைந்தது. ஏனென்றால் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி மம்தா பானர்ஜியின் கார் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் செல்லும் போது சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். இதனையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதப்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர். 

இதற்கு மம்தா பானர்ஜியின் கட்சியினர் பதில் கடிதமாக ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்கலா’ என்ற வாசகத்துடன் அனுப்பிவந்தனர். இந்த விவகாரம் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையில் பெரும் மோதலை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பாஜகவினர் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஜெய் ஸ்ரீராம் விவகாரத்தை நினைவு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இம்முறை மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில்  பாஜக 18 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. இது கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக பெற்ற 2 இடங்களைவிட மிகவும் அதிகமான இடங்களாகும். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com