கேரள சட்டப்பேரவையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே சட்டப்பேரவை கேட்டீனில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு பீஃப் உணவு வழங்கப்பட்டது.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காலை முதலே அமைச்சர்களும், பல கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை விவாதத்தில் கலந்துகொள்ள வந்தனர். இந்நிலையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே சட்டப்பேரவை கேட்டீனில் இன்றைய ஸ்பெஷல் பீஃப் பிரை என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் பீஃப் உணவை ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பீஃப் உணவு தங்களின் வாழ்க்கையோடு ஒட்டி விட்டது என்றும், அதனை ஒருபோதும் தங்களிடமிருந்து அகற்ற முடியாது எனவும் கேரள மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.