\
உதவ யாரும் முன்வராததால் மனைவியின் மடியில் துடிதுடித்து உயிரிழந்த கணவர் - ஆந்திராவில் சோகம்

உதவ யாரும் முன்வராததால் மனைவியின் மடியில் துடிதுடித்து உயிரிழந்த கணவர் - ஆந்திராவில் சோகம்

உதவ யாரும் முன்வராததால் மனைவியின் மடியில் துடிதுடித்து உயிரிழந்த கணவர் - ஆந்திராவில் சோகம்
Published on: 

ஆந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்தில் மனைவியின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த கணவர். கொரோனா அச்சத்தால் யாரும் காப்பாற்ற முன்வராததால் உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் குப்பம் குடிபள்ளி மண்டலம் மித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனது மனைவியுடன் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு செல்ல குப்பம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடைபாதையில் விழுந்துள்ளார். அப்போது அவரது மனைவி அவரை காப்பாற்ற முயன்றும் உயிரிழந்தார். மனைவி மடியிலேயே கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அங்கிருந்த பொதுமக்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருக்குமோ என எண்ணி யாரும் காப்பாற்ற முன்வராததால் ரயில் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார் இதுகுறித்து குப்பம் ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com