இந்தியா
குண்டும் குழியுமான சாலைகளில் அழகிப் போட்டி : மத்திய பிரதேசத்தில் நூதன போராட்டம்
குண்டும் குழியுமான சாலைகளில் அழகிப் போட்டி : மத்திய பிரதேசத்தில் நூதன போராட்டம்
மத்திய பிரதேசத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க நூதன முறையில் பெண்கள் நடத்திய போராட்டத்தின் வீடியோ, இணைய தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
தலைநகர் போபாலின் டேனிஷ் நகர் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதிக வரி வசூலிக்கப்பட்டும் அடிப்படை வசதிகளின்றி இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுகுறித்து நிர்வாகத்தின் கவனத்தைக் கவர்வதற்காக அன்ஷு குப்தா என்பவர் குண்டும் குழியுமான சாலையில் அழகிப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்தார். தண்ணீர் தேங்கியுள்ள சாலையில் வளைந்து நெளிந்து பெண்களும் குழந்தைகளும் பதாகைகளுடன் நடந்து கேட் வாக் சென்றனர்.