'ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் காட்டுக்கு'பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்

'ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் காட்டுக்கு'பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்
'ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் காட்டுக்கு'பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர்

நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பியர் கிரில்ஸ்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘மேன் Vs வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.

இவருடன் இந்திய பிரதமர் மோடி காட்டுக்குள் பயணம் செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒரு கோடிக்கும் அதிகமானோர் தொலைக்காட்சியில் பார்த்தனர். இது சாதனை என அந்த தொலைக்காட்சி அறிவித்தது. இந்நிலையில், பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இந்நிகழ்ச்சி குறித்து பியர் கிரில்ஸ் முதலில் ஒரு ட்வீட் செய்தார். அதில், “பிரதமர் மோடி உடனான நிகழ்ச்சி, தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தது. அதன் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னுடைய Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினியுடன்தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்தார். பின்னர், எதிர்ப்பு காரணமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்பதை வெறும் சூப்பர் ஸ்டார் என மாற்றியது நடந்தது.

இந்நிலையில், இன்று ரஜினி கலந்து கொண்ட நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு பியர் கிரில்ஸ் ட்வீட் செய்துள்ளார் அதில் " நான் உலகம் முழுவதும் எவ்வளவோ நட்சத்திரங்களுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறேன். ஆனால், இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய ஸ்டாராக இருக்கலாம். ஆனால் காட்டுக்குள் எல்லாமே வேறு மாதிரி. ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இதில், ரஜினிகாந்தை புதிய பரிமாணத்தில் காட்டியுள்ளோம்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com