“ரெகுலர் செக் அப்பிற்காக கங்குலி வந்தார்; நலமுடன் இருக்கிறார்” -மருத்துவமனை நிர்வாகம்

“ரெகுலர் செக் அப்பிற்காக கங்குலி வந்தார்; நலமுடன் இருக்கிறார்” -மருத்துவமனை நிர்வாகம்

“ரெகுலர் செக் அப்பிற்காக கங்குலி வந்தார்; நலமுடன் இருக்கிறார்” -மருத்துவமனை நிர்வாகம்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகதான் வந்துள்ளார் என அப்போலோ GLENEAGLES மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொண்டனர். 

தொடர்ந்து மருத்துமனையிலிருந்து டிஸ்சார்ஜான கங்குலியை அவரது வீட்டிலேயே மருத்துவக் குழு கண்காணித்து வந்தது. இந்நிலையில் அவர் இன்று மருத்துவமனைக்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

“48 வயதான சவுரவ் கங்குலி அவரது இதய செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளவே வந்துள்ளார். இது வழக்கமான செக் அப்தான். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர் பூரண நலத்துடன் இருக்கிறார்” என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கங்குலி மீண்டும் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி பரவியிருந்தது. அதை மருத்துவமனை நிர்வாகம் இந்த அறிக்கையின் மூலம் மறுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com