ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி (48 வயது) நேற்று பகல் நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயத்தில் செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை கணடறிந்தனர்.

அதை தொடர்ந்து அவருக்கு நேற்று மாலை ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தகட்டமாக கொடுக்க வேண்டிய சிகிச்சை குறித்து திங்கள் அன்று முடிவு செய்யப்படும் எனவும் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு இரவு நேர உணவை கங்குலி எடுத்துக் கொண்டார் எனவும், அவர் நல்ல நிலையில் உடல் நலன் தேறி வருகிறார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் விவரித்துள்ளது. மேலும் கங்குலியின் குடும்பத்தில் இதற்கு முன்னதாக சிலருக்கு இதய நோய் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து. 

வார்டில் உள்ள கங்குலியை மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தன்கார் உட்பட பல முக்கிய பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அதே போல அவர் விரைவில் குணம் பெற வேண்டி சமூக வலைத்தளங்களில் போஸ்டுகளும் குவிந்து வருகின்றன. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com