தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் மதசார்பற்ற ஜனதா தளம்? பசவராஜ் பொம்மை சொன்ன தகவல்!

மதசார்பற்ற ஜனதா தள கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸிடம் பாஜக ஆட்சியை பறி கொடுத்தது. ஆட்சியமைப்பதில முக்கிய பங்க வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களை மட்டுமே வென்றது.

kumaraswamy
kumaraswamypt desk

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய குமாரசாமி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக பாஜக தலைவர்கள், தேவகவுடாவுடன் ஆலோசனை நடத்திய பின் உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com