டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லி சென்ற அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோரை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.