மறைமுக கட்டணங்கள் வசூலிப்பதாகப் புகார்... வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

கடன்களை வசூலிக்கும்போது அதற்கான கட்டணங்களைப் பற்றி வெளிப்படைத் தன்மை தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடன்களை வசூலிக்கும்போது அதற்கான கட்டணங்களைப் பற்றி வெளிப்படைத்தன்மை தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மறைமுக கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாறுபட்ட வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி முறைக்கு மாறும்போது கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை தேவை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தவணைத் தொகை அல்லது செலுத்தும் கால அளவை வாடிக்கையாளர் விருப்பப்படி மாற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதம் என கூடுதலாக வசூலிக்காமல் விதிமுறைக்குட்பட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com