ஒடிசா
ஒடிசாpt

ஒடிசா| தடம் புரண்ட 11 ரயில் பெட்டிகள்.. பரிதாபமாக உயிரிழந்த நபர்!

ஒடிசாவில் தடம்புரண்ட பெங்களூரு - காமாக்யா அதிவிரைவு ரயில்: ஒருவர் உயிரிழப்பு.
Published on

ஒடிசா மாநிலத்தில் சவுத்வார் நகருக்கு அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பலர் காயமடைந்தனர்.

பெங்களூரு - காமாக்யா ஏசி எக்ஸ்பிரஸ் ரயிலில் 1000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திடீரென நேற்றைய தினம் காலை 11.54 மணிக்கு மங்குலி ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டிகள் தடுமாற பல பெட்டிகள் கவிழ்ந்தது. கிட்டதட்ட 11 ரயில் பெட்டிகள் தடம் புறண்டதாக கூறப்படுகிறது.

இதனால், 1 பயணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 30 பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மீட்புப் பணி ரயிலும், மருந்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா
”ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவின் ஆலமரம்..” பிரதமர் மோடி புகழாரம்!

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஒரு கட்டுப்பாட்டு அறையும், உதவி எண்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு மீட்புப் பணி ரயிலும், மருந்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com