மனைவி ஆபாசப் படத்தில் நடித்ததாக சந்தேகம் - குழந்தைகள் கண்முன்னே கணவன் நிகழ்த்திய கொடூரம்

மனைவி ஆபாசப் படத்தில் நடித்ததாக சந்தேகம் - குழந்தைகள் கண்முன்னே கணவன் நிகழ்த்திய கொடூரம்

மனைவி ஆபாசப் படத்தில் நடித்ததாக சந்தேகம் - குழந்தைகள் கண்முன்னே கணவன் நிகழ்த்திய கொடூரம்
Published on

பெங்களூருவில் ஆபாசப் படத்தில் நடித்ததாக சந்தேகப்பட்டு மனைவியை குழந்தைகள் கண்முன்னே குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் 40 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஜஹீர் பாஷா. இவரது மனைவி 35 வயது நிரம்பிய முனிபா. இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஜஹீர் பாஷா அதிகமாக ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் உடையவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆபாசப் படம் பார்த்து, அதில் தனது மனைவி முபீனா இருந்ததாக ஜஹீர் சந்தேகிக்கத் தொடங்கினார். மனைவியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகமடைந்த ஜஹீர், முனீபாவை துன்புறுத்தத் தொடங்கினார்.

இரண்டு மாதங்களுக்கு முன் குடும்ப விழா ஒன்றில் முனீபாவை ஜஹீர் தாக்கி அடித்துள்ளார். இதனால் அங்கிருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஏன் முனீபாவை ஜஹீர் துன்புறுத்தினார் என்பதை அறிந்து கொண்டனர். 20 நாட்களுக்கு முன்பு, முனீபாவை ஜஹீர் மிகவும் மோசமாகத் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த முனீபாவின் தந்தை கவுஸ் பாஷா காவல்துறையை அணுகினார். ஆனால் புகாரைப் பதிவு செய்வதிலிருந்து முனிபா தடுத்ததால் புகாரளிக்காமல் திரும்பி விட்டார். இது அவரது மகள் முனீபாவின் உயிருக்கே எமனாக அமைந்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.40 மணியளவில் முனீபாவின் மூத்த மகன் அருகில் உள்ள தனது தாத்தா கவுஸ் பாஷாவின் வீட்டிற்கு விரைந்து சென்று, தங்கள் தாயை தங்கள் தந்தை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளான்.கவுஸ் பாஷா தனது மகள் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு முனீபா இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜஹீர் பாஷாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com