பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை
பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடைweb

இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்த தடை.. மீறினால் நடவடிக்கை!

ஜூஸ் கடைகள், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

உணவு பாதுகாப்புதுறை சட்டத்தின் படி பிளாஸ்டிக் ஸ்ட்ராவ்க்களை பயன்படுத்தக்கூடாது எனவும், மீறி ஜூஸ் கடைகள், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் இளநீர் கடைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஸ்ட்ராவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் இதனை ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள், ஜூஸ் கடை உரிமையாளர்கள் மற்றும் இளநீர் கடை உரிமையாளர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை
பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நிறம் கலந்த சில்வர் பேப்பர்களில் பார்சல் செய்யக்கூடாது என ஏற்கனவே உணவு பாதுகாப்புதுறை உத்தரவிட்ட நிலையில், ஜூஸ் கடைகளில் வழங்கக்கூடிய ஜூஸ் ஸ்ட்ராவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்த தடை..

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை விடுத்த அறிவிப்பில், பிளாஸ்டிக் ஸ்ட்ராவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றன, இவை மக்கும் தன்மை அற்றவை மற்றும் கடலில் கலந்து, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கழிவு மேலாண்மை பிரச்சனைகளை அதிகரிக்கின்றன, சில நாடுகளில், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை
பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை

எனவே ஆபத்துவிளைவிக்கும் வகையில் ஜூஸ் கடைகளில் பயன்படுத்தக்கூடிய ஜூஸ் ஸ்ட்ராவ்கள் பிளாஸ்டிக்கில் பயன்படுத்தக் கூடாது எனவும், உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பிளாஸ்டிக்கில் ஜூஸ் ஸ்ட்ராவ்க்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் ஸ்ட்ராவ்-க்கு பதிலாக காகித ஸ்ட்ராவ் அல்லது சில்வர் ஸ்ட்ராவை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை வணிக நிறுவன உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com