மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா முகநூல்

கொத்து கொத்தாக உதிரும் தலைமுடி.. ஒரே வாரத்தில் 50 பேருக்கு வழுக்கை! புதிதாக பரவும் மர்மநோய்?

காலநிலைக்கு ஏற்றார் போல புது புது தொற்றுக்களின் பாதிப்பு உருவாகும் சூழலில், மகாராஷ்டிரா மாநிலம் புந்தானா மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மர்ம நோய் ஒன்று வேகமாக பரவிவருகிறது.
Published on

மகாராஷ்டிராவில் பரவும் மர்மநோய்... கொத்து கொத்தாக உதிரும் தலைமுடி.. ஒரே வாரத்தில் 50 பேருக்கு வழுக்கை என்ன நடந்தது பார்க்கலாம்.

காலநிலைக்கு ஏற்றார் போல புது புது தொற்றுக்களின் பாதிப்பு உருவாகும் சூழலில், மகாராஷ்டிரா மாநிலம் புந்தானா மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மர்ம நோய் ஒன்று வேகமாக பரவிவருகிறது.

இந்த மர்ம நோயால் கடந்த ஒருவாரத்தில் மட்டும் போர்காவ், கல்வாட், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசித்து வரும் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரின் தலை முடியும் கொத்து கொத்தாக உதிர தொடங்கியுள்ளது. இப்படி ஒரு வாரத்தில் மட்டும் 50 பேருக்கு தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகியுள்ளது என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் , பீதி அடைந்த அம்மக்கள் அவசர அவசரமாக அருகிலிருந்த மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்தமான நீர் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டநிலையில்., சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, “ தலையில் முடியைத் தொட்டால் அப்படியே கையோடு முடி வந்துவிடுகிறது. சுமார் 50 பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மூன்று கிராமத்திற்கும் சென்று அங்கு விநியோகம் செய்யப்படும் தண்ணீர் சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர முடி மற்றும் தோல் மாதிரிகளும் சோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. சோதனை முடிவுகள் வந்தால் முடி உதிர்வுக்கான காரணங்கள் என்னவென்று தெரியவரும். எனவே, கிராம மக்கள் தங்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு தண்ணீரைச் சுட வைத்து பயன்படுத்த வேண்டும் .” என்று தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!

கிட்டதட்ட 10 நாட்களாக பரவும் இந்த மர்மநோய்க்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com