ஐதராபாத் அருகே விநாயகர் லட்டு ஒன்று ரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுகளை ஏலம் விடுவது ஒவ்வொரு வருடமும் நடக்கும். கடந்த வருடம் இந்த விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த ஆண்டும் விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது.
21 கிலோ எடையுள்ள இந்த லட்டுவை ஏலம் எடுக்க ஏராளமானோர் போட்டிப் போட்டனர். இறுதியில், கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி, 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இவர் இப்படி ஏலத்தில் எடுப்பது இது 9 வது முறை.
முதன்முதலில் இங்கு 1994 ஆம் ஆண்டு லட்டு ஏலத்தில் விடப்பட்டது.