பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

1998 ஆம் ஆண்டில், ஒசூர் அருகே நடந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது எனக்கூறி இடைக்கால மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அவரது தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் என்றும் இந்த வழக்குத் தொடர்பாக, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக் கல் செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com