\
பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
Published on

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் நாள்தான் பக்ரீத்.

இறைவனின் அருளைப் பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் பக்ரீத் இருக்கிறது. இந்த பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் இறை வழிபாட்டுடன் கொண்டாடி வருகின்றனர். நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்புத் தொழுகையும் நடைபெற்று வருகிறது.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com