உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார்.
ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் இடையே தேசிய நெடுஞ்சாலையில் விஷ்ணு பிரயாக் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து 1800க்கும் அதிகமானோர் அங்கேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. சாலை முழுவதும் மண் சரிந்த நிலையில் அருகிலுள்ள அலக் நந்தா ஆற்றிலும் மண் சரிந்தது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் முடங்கியிருந்த பக்தர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார்.