யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?

யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?

இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது.

இந்தப் பரம் வீர் சக்ரா விருது இதுவரை 21 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 பேருக்கு மரணத்திற்கு பின் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. 21 வீரர்களில் 20 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். ஒருவர் விமானப்படையைச் சேர்ந்தவர். பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரில் ஒருவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. 1987ல் விடுதலைப் படைகளுக்கு எதிரான மோதலின்போது குண்டடிபட்ட பின்பும் 5 எதிராளிகளை கொன்று விட்டு உயிரிழந்த மேஜர் பரமேஸ்வரன் ராமசாமிக்கு பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டுள்ளது. இவரது பெயரில் சென்னையில் ஒரு சாலையும் இருப்பது குறிப்பிடத்தக்கது 

காஷ்மீர் பத்காம் பகுதியைச் சேர்ந்த மேஜர் சோம்நாத் சர்மாவிற்கு 1947 ஆம் ஆண்டு அவரின் மறைவிற்குப் பிறகு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு நாயக் ஜாடு நாத் சிங் மற்றும் மேஜர் பீரு சிங் சேகாவத் ஆகியோருக்கு மறைவுக்குப் பின் பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு லான்சு நாய்க் கரம் சிங்கிற்கும் ராமா ராகோப ராணேவுக்கும் மேஜர் பீரு சிங் சேகாவத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவுக்கு அவர்களின் மறைவுக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது. 

1962 ஆம் ஆண்டு மேஜர் தன்சிங் தாப்பாவுக்கும் சுபேதார் ஜோகீந்தர் சிங்கிற்கும் மேஜர் சைத்தான் சிங்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு அவில்தார் அப்துல் அமீத்துக்கும் லெப்.கர்னல் அர்டெசீர் புருசோர்ஜி தாராபூருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு லான்சு நாய்க் ஆல்பெர்ட், நிர்மல் ஜித்சிங் சேகோன், அருண் கேதர்பால், மேஜர் ஹோஷியார் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு நயீப் சுபேதார் பாணாசிங், மேஜர் ராமசாமி பரமேசுவரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ், சஞ்சய் குமார், கேப்டன் விக்ரம் பாத்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக பரம்வீர் சக்ரா விருது ராணுவத்தில் மிக உயரிய பதவியில் இருக்கக்கூடியவர்களுக்கும், சாதனைகள் புரிந்தவர்களுக்கும், எதிரியை போரில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கும், தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிந்து, முழு வாழ்க்கையையும் ராணுவத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மரணத்திற்குப் பின்பும் வழங்கப்படும்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com