\
உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக சொன்ன அரசு மருத்துவமனை!

உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக சொன்ன அரசு மருத்துவமனை!

உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக சொன்ன அரசு மருத்துவமனை!
Published on

டெல்லி அருகே உயிரோடு இருந்த குழந்தையை, இறந்ததாகக் கூறிய அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்ற அரசு மருத்துவமனையில் பதர்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று குழந்தை பிறந்தது. குறைபிரசவம் என்பதால் அந்த குழந்தை எந்தவித அசைவும் இன்றி இருந்துள்ளது. குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தையை ஒரு பையில்போட்டு சீல் வைத்து குழந்தையின் தந்தை ரோஹித்திடம் ஒப்படைத்தனர். குழந்தையை பெற்றுக்கொண்ட உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று அதற்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர். அப்போது குழந்தை திடீரென அசைவதை கண்ட ரோஹித்தின் சகோதரி உடனடியாக பையை பிரித்து பார்த்தார். குழந்தை உயிருடன் இருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த குழந்தையை சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com