ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவில் உள்ள தபஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான மணிமாலா என்பவர் பிரசவ வலியுடன் காக்கி நாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை 4 கால்களுடன் பிறந்தது கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த குழந்தையின் வயிற்றுப் பகுதியை ஒட்டி 4 கால்களும் உள்ளன.
இதுபற்றி அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் மணிகயம்பா கூறுகையில், 10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்று வித்தியாசமான முறையில் பிறக்கும் என்றார். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. குழந்தையை மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே 4 கால்களுடன் பிறந்த குழந்தை பற்றி காக்கிநாடா பகுதியில் தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.