விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு, ஆயுள் காலம் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து கொச்சி நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில் 162 பயணிகள் இருந்தனர். 35 ஆயிரம் அடி உயரத்தில் விமான பறந்துகொண்டிருந்தபோது, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் யாரும் மருத்துவர்கள் இருக்கிறீர்களா என அறிவிப்பு செய்தார். நல்ல வேளையாக விமானத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் உதவியுடன் நடுவானில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கொச்சி வர வேண்டிய விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு தனியார் மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர். அவர்கள் நலமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த விமானம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல, சலுகை அறிவித்துள்ளது.