\
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி நேரில் ஆஜராக உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி நேரில் ஆஜராக உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி நேரில் ஆஜராக உத்தரவு
Published on

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் வரும் 30-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை ரேபர்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ., உச்சசநீதிமன்றத்தில் முறையிட்டது.

அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் வரும் 30-ஆ தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com