சபரிமலையில் குவியும் ஐயப்பன் பக்தர்கள்: 12 நாட்களில் எவ்வளவு வருவாய் தெரியுமா?

சபரிமலையில் குவியும் ஐயப்பன் பக்தர்கள்: 12 நாட்களில் எவ்வளவு வருவாய் தெரியுமா?
சபரிமலையில் குவியும் ஐயப்பன் பக்தர்கள்: 12 நாட்களில் எவ்வளவு வருவாய் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை ரூ.52 கோடியே 55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த 16 ஆம் தேதி முதல் தற்போது வரையிலான 12 நாட்களில் ரூ.52 கோடியே 55 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் கிடைத்துள்ளது,' என தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார்.

இதில் சபரிமலை பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58 கோடி, அரவணை மூலம் ரூ.23.57 கோடி, காணிக்கையாக ரூ.12.73 கோடி, அறை வாடகையாக ரூ48.84 லட்சம், அபிஷேகம் மூலம் ரூ.31.87 லட்சம் கிடைத்துள்ளது.

கோவிட் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்த கடந்த ஆண்டு மண்டல மற்றும் மதுர விளக்கு பூஜை காலத்தில் இதுவரையிலான வருவாய் ரூ.9.92 கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.43.33 கோடி அதிகம் கிடைத்துள்ளது.

பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப கோயில் பிரசாதங்களான அப்பம், அரவணா அடுத்த 20 நாட்களுக்கு 51 லட்சம் கன்டெய்னர்கள் இருப்பு உள்ளதாக தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com