\
சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர்

சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர்

சபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர்
Published on: 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார். 

‘ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்’ என்ற பெயரில் சபரிமலை ஐயப்பன் கோயில் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கோயிலின் பெயரை ‘சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றியது. 

இந்நிலையில் தற்போதைய மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசில் அண்மையில் புதிதாக பொறுப்பேற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை மீண்டும் ‘சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்’ என மாற்ற தீர்மானித்தது. நேற்று நடந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com