‘இந்தி தெரியலைன்னா  வெளியேறலாம்’ - தமிழக மருத்துவர்களை கடிந்து பேசிய ஆயுஷ் செயலாளர்!

‘இந்தி தெரியலைன்னா வெளியேறலாம்’ - தமிழக மருத்துவர்களை கடிந்து பேசிய ஆயுஷ் செயலாளர்!

‘இந்தி தெரியலைன்னா வெளியேறலாம்’ - தமிழக மருத்துவர்களை கடிந்து பேசிய ஆயுஷ் செயலாளர்!
Published on
யோகா ஆன்லைன் வகுப்பின் போது, 'இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம்' என்று தமிழக மருத்துவர்களிடம் ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோடெச்சா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான, ஆன்லைன் பயிற்சி பட்டறை வகுப்புகள் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தன. இதில் இந்தியா முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
 
 
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆயுஷ் செயலாளர் வைத்ய ராஜேஷ், பெரும்பாலும் இந்தியிலேயே உரையாற்றியதால், `எங்களுக்கு இந்தி புரியவில்லை; தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்" என்று தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
 
அப்போது வைத்ய ராஜேஷ், ‘’எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் இந்தியில் பேசுகிறேன். இந்தி தெரியாதவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பைவிட்டு வெளியேறுங்கள்" என்று தடாலடியாக கூறினார். 
 
வைத்ய ராஜேஷின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்தும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 
 
இந்நிகழ்வு குறித்து பயிற்சியில் கலந்துகொண்ட மருத்துவர் ஒருவர் கூறுகையில், ''இயற்கை சிகிச்சை மற்றும் யோகாவின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆறு அமர்வுகள் இப்பயிற்சியில் இருந்தன. ஆனால் முதல் நாளிலிருந்தே, குறைந்தது நான்கு அமர்வுகள் இந்தியில் நடைபெற்றன. இது எங்களுக்குப் புரிய மிகவும் கடினமாக இருந்தது.
 
இது ஒரு தேசிய மாநாடு. இது அனைவருக்கும் புரியும் மொழியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பது இயல்பானது. மேலும் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சாளர்களிடம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் முடித்த நிபுணர்களுக்கான அமர்வுகளை நடத்த போதுமான தகுதி இல்லை.
 
பேச்சாளர்களில் சிலர் அறிவியல் ரீதியாக தவறான விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் இதைப் பற்றி எந்த கேள்வியையும் கேட்க அனுமதிக்கவில்லை'' என்றார் அவர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com