\
மீண்டும் வெடிக்கிறது ராமர் கோயில் விவகாரம்: சாமியார்கள் கூடி ஆலோசனை

மீண்டும் வெடிக்கிறது ராமர் கோயில் விவகாரம்: சாமியார்கள் கூடி ஆலோசனை

மீண்டும் வெடிக்கிறது ராமர் கோயில் விவகாரம்: சாமியார்கள் கூடி ஆலோசனை
Published on

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சாமியார்கள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனால் இப்பிரச்னை மீண்டும் பூதாகரமாகும் சூழல் உருவாகியுள்ளது.

அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோயில் கட்டுவதில் இந்து சமய அமைப்புகளும், பாஜகவும் உறுதியாக உள்ளன. இத்தகைய சூழலில் வரும் 9 ஆம் தேதி குரு பூர்ணிமா முடிந்ததும் சீதாபூரில் உள்ள ஆசிரமத்தில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அனைத்து மாநில சாமியார்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இத்தகவலை சீதாபூர் நர்தானந்த் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி விதய் சைதன்ய மகராஜ் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. எனவே அங்குள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பாஜகவும், இந்து அடிப்படைவாத அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதியின் மூன்றடுக்கு கோபுரங்கள் இடிக்கப்பட்டன. இந்த இடிப்பு சம்பந்தமான வழக்கும், பாபர் மசூதி உள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கும் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவது குறித்து சாமியார்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com