\
Ayodhya Ram Temple Donation Scam: 8 Booked
அயோத்தி ராமர் கோயில்File image

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு | 8 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார்.
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடை முறைகேடு தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்து தர்ம சேனாவின் தலைவர் சந்தோஷ் துபே என்பவர் அயோத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுமார் ₹200 கோடி காணிக்கைப் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், இக்குற்றச்சாட்டை ராமஜென்மபூமி தீர்த்தக் ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் மறுத்துள்ளார். இவ்விவகாரம் அரசியல் புயலை எழுப்பிய் நிலையில், 'ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா' அறக்கட்டளையின் கோரிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்Pt

இக்குழு தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் எவரும் அயோத்தியைவிட்டு வெளியேறுவதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அயோத்தி காவல்நிலையத்தில் 8 பேர் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே முறைகேடு தொடர்பாக விசாரணைநடத்திவரும் சிறப்பு புலனாய்வுக் குழு, தனது முதற்கட்ட விசாரணைஅறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. நன்கொடை பணத்தை கையாடல்செய்த 8 பேரிடம் தொகையை மீட்ககாவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com