அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 2100 கோடி ரூபாய் நன்கொடையாக வசூல்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ராமருக்கு கோயில் கட்டும் பணிக்காக 45 நாட்கள் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்றன.
நாடு முழுவதும் இந்த நிதி திரட்டும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உடன் கோயில் கட்டுமான பணிக்காக நிதி திரட்டும் பணி நிறைவடைந்துள்ளது. மொத்தமாக சுமார் 2100 கோடி ரூபாய் இதன் மூலம் நண்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
விஸ்வ ஹிந்து பரிக்ஷத் அமைப்பின் தலைமையில் கடந்த சங்கராந்தி அன்று நிதி திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. “இந்தியாவின் கிராமம், நகரம் என அயராமல் வீடு வீடாக சென்று நிதி திரட்டும் பணியை மில்லியன் கணக்கான கார்யகர்த்தாவினர் மேற்கொண்டனர். உலகின் மிகப்பெரிய நிதி திரட்டும் முயற்சிகளில் இது ஒன்று. பல நல்லுள்ளம் கொண்ட மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை இதற்காக கொடுத்து உதவியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார் வழக்கறிஞரும், விஷ்வா ஹிந்து பரிக்ஷத்தின் மத்திய தலைவருமான அலோக் குமார்.
நாட்டு மக்களின் முன்னாள் இந்த நிதி திரட்டும் பணியின்போது நிகழ்ந்த நெகிழ்ச்சியூட்டும் அனுபவத்தின் காட்சிகளை விரைவில் அப்லோட் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020இல் அயோத்தியில் பிரதமர் மோடி, ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல்ளை நட்டு பணிகளை தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.