அயோத்தியை அலங்கரித்த 5.5 லட்சம் அகல்விளக்குகள் - கோலாகல கொண்டாட்டம்

அயோத்தியை அலங்கரித்த 5.5 லட்சம் அகல்விளக்குகள் - கோலாகல கொண்டாட்டம்

அயோத்தியை அலங்கரித்த 5.5 லட்சம் அகல்விளக்குகள் - கோலாகல கொண்டாட்டம்
Published on

தீபாவளி பண்டிகையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 5.5 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ராவணனுடனான போரில் வெற்றிபெற்ற ராமன் அயோத்தி திரும்பியபோது அங்கு பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அங்கு தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த வருடம் ராமர்கோயில் கட்டுவதற்கான அடிக்கல், அயோத்தியில் நடப்பட்ட நிலையில், அந்த இடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இன்று அயோத்தி ஒட்டிய சரயூ நதிக்கரை ஓரத்தில் 5. 5 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதைத்தவிர ராமர்கோயில் கட்டப்பட உள்ள சுற்றியப் பகுதியில் மகாபாரத நாடகங்கள், விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவிற்கு தலைமை தாங்கி விளக்கை ஏற்றி வைத்தார். மேடையில் அவருடன் பல தலைவர்கள் இணைந்திருந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com