அயோத்தி
அயோத்தி முகநூல்

28 மாதமாக ரூ.100 ஊதியம்... ’ஜலசமாதி’ செய்யப்பட்ட அயோத்தி அர்ச்சகரின் உடல்!

28 ஆண்டுகளாக மாதம் வெறும் ரூ.100 மட்டுமே ஊதியமாக இவருக்கு கொடுக்கப்பட்டநிலையில், இதன்பிறகுதான் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது.
Published on

அயோத்தி ராமர் கோயிலில் தலைமை பூசாரியான சத்யேந்திர தாஸ் காலமானநிலையில், அவரது உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைராலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக அறியப்படுபவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்.

இவர், கடந்த சில நாட்களாகவே, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நல பாதிப்புகளால் அவதியடைந்துவந்துள்ளார். கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பக்கவாதம் காரணமாக அயோத்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு மூளையில் திடீர் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அவர் லக்னோவின் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி காலை 8 மணியளவில் காலமானார். இந்தநிலையில்தான், இவரது உடலை சரயு நதியில் ஜலசமாதி செய்துள்ளனர்.

அயோத்தி
ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி.. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன?

இறுதி சடங்கு நடத்துவதற்கு முன்பு நகரம் முழுவதும் இவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டநிலையில், இறுதியில் உடலில் கனடிமான கற்கள் கட்டப்பட்டு சரயு நதியில் மூழ்கடிக்கப்பட்டது. இதுதொடர்பான விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யார் இந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அங்கு கூடாரத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த ராமர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவர். மேலும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர்.

குறிப்பாக, 28 ஆண்டுகளாக மாதம் வெறும் ரூ.100 மட்டுமே ஊதியமாக இவருக்கு கொடுக்கப்பட்டநிலையில், இதன்பிறகுதான் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சத்யேந்திர தாஸின் மறைவுக்கு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பண்டிதர்களிலேயே நன்கு படித்தவராக அறியப்படும் இவர், சத்யேந்திர தாஸ் சமஸ்கிருத மகாவித்யாலயாவில் பட்டம் பெற்றவர். ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்தபிறகு, ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக தொடர்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com