
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி உச்சநீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இழுபறியில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வெளியிடுகிறது. இதனையொட்டி உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன. தீர்ப்பு வழங்கும் 5 நீதிபதிகளுக்கும் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் உச்சநீதிமன்றம் மற்றும் அது அமைந்துள்ள வளாகத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் தவிர்க்க பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.