அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போலவே புதிய வளாகம் !

அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போலவே புதிய வளாகம் !
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போலவே புதிய வளாகம் !

அயோத்தியில் உள்ள தன்னிப்பூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் பரப்பில் மருத்துவமனை, நூலகம் மற்றும் அருங்காட்சியகம் அடங்கிய வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

நீண்ட நாட்களாக நடந்துவந்த அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ராமர் கோவில்கட்ட அனுமதி அளித்தது. அதேபோல் நகரின் முக்கிய பகுதியில் மசூதி கட்ட சன்னி வாக் வாரியத்திற்கு மாற்று இடமாக ஐந்து ஏக்கர் ஒதுக்குமாறு உத்தரவிட்டது.

அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போலவே தற்போது தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டப்படும் என அறக்கட்டளை அலுவலக உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல உணவு விமர்சகருமான புஷ்பேஷ் பந்த் அருங்காட்சியகத்தின் ஆலோசகர் கண்காணிப்பாளராக இருப்பார்.

தன்னிப்பூரில் 15,000 சதுர அடியில் கட்டப்படவுள்ள இந்த வளாகத்தில், ஒரு மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம் மற்றும் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் ஆகியவை வரவுள்ளன என உத்தரபிரதேச சன்னி மத்திய வாக் வாரியத்தால் உருவாக்கப்பட்ட இந்தோ - இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான அதார் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜாமியா மில்லியா இஸ்லாமியாவைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.எம். அக்தர் இந்த கட்டுமான ஆலோசகராக இருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது உத்தரபிரதேச மாநில அரசு அயோத்தியாவின் தன்னிப்பூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வளாகம் கட்ட அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com