அச்சுறுத்தும் AY 4.2 கொரோனா வைரஸ் - மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

அச்சுறுத்தும் AY 4.2 கொரோனா வைரஸ் - மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
அச்சுறுத்தும் AY 4.2 கொரோனா வைரஸ் - மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

புதிய பரிமாணம் அடைந்த AY 4.2 கொரோனா வைரஸ்; கர்நாடகாவில் 2 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஆரம்ப பள்ளி நடுநிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி என அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு பெரும்பான்மையான மாணவர்கள் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். அனைத்து மால்களிலும், திரையரங்குகளிலும் 100 % மக்கள் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் அனைத்து இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடி வருகின்றனர். இந்த தளர்வுகளை அச்சுறுத்தும் விதமாக பெங்களூருவில் இருவருக்கு கொரோனா வைரஸின் புதிய பரிமாணமான AY 4.2 வைரஸ் இருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்டா 4 வைரஸின் பரிமாண வளர்ச்சியான AY 4.2 மூலமாக ரஷ்யா சைனா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மூன்றாவது அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பெங்களூரு நகரில் உள்ள கொரோனா ஆய்வு மையத்தில் பலருடைய மாதிரிகளை எடுத்து மரபணு வரிசை படுத்தல் ஆய்வில் ஈடுபட்ட போது AY 4.2 வைரஸ் பாதிப்பு இருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை துவங்க பட்டுள்ளதாகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி துரிதமாக எடுத்துள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

புதிய பரிமாண வளர்ச்சி அடைந்துள்ள AY 4.2 வைரஸ் குறித்து நாம் கவனக்குறைவாக இருக்க கூடாது என்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என் மக்கள் அலட்சியத்தோடு இருக்காமல் உரிய முறையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் தவறினால் மூன்றாவது அலையின் காரணமாக நாம் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com