ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், 18 புதிய உறுப்பினர்களை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்திய விலங்குகள் நலவாரியத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்ட உறுப்பினர்கள் அஞ்சலி சர்மா, சவுமியா ரெட்டி, ஜெய்சிம்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.