ஆந்திரா
ஆந்திராமுகநூல்

இதுவல்லவா பாசம்!! தாய் சொன்ன ஒற்றை வார்த்தை.. 10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

தனிமையில் வாடிய தாய் சொன்ன ஒரே வார்த்தைக்காக 10 ஆண்டுகளாக ஆட்டோ டிரைவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published on

பெற்றோரை முதுமைப்பருவத்தில் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பலருக்கு மத்தியில், தனது தாயின் முகத்தில் உதிக்கும் சிறு புன்னகைக்காய் 10 வருடமாக ஆட்டோவிலேயே சுமந்து செல்லும் பாச மகனின் கதை இது. அந்த ஆட்டோ எந்திரங்களினாலோ எரிபொருளாலோ இயங்கவில்லை.. இயங்குவது தாய் -மகனின் பாசக்கயிறால் என்கிறார்கள் இந்த நிகழ்வை அறியும் பலர்.

ஆந்திரப்பிரதேசத்தின் எர்ணகுடம் கிராமத்தில் வசித்து வருபவர் மசகா கோபி இவருக்கு வயது 52. இவரது தாயின் பெயர் சத்யாவதி.

2012 இல் தனது கணவரை இழந்த சத்யாவதி மிகுந்த மன உலைச்சலிலும் தனிமையிலும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாது தனது மகன் கோபி தினமும் ஆட்டோ ஓட்ட சென்றால் மட்டுமே, அவர்களுக்கு உணவு என்பதை அறிந்து கொண்ட தாய் சத்யாவதி, கோபியை குறித்து தொடர்ந்து கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.

கோபி - சத்யாவதி
கோபி - சத்யாவதிமுகநூல்

தனது மகன் கோபி தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்றும் கூற, சத்யாவதிக்கு ஆசை இருந்தாலும் அதை கூற முடியாத நிலையில் அவர்களின் குடும்பத்தின் சூழல் இருக்கிறது. சாலைகளில் ஆட்டோவை கோபி கவனமாக ஓட்டி செல்வாரா? என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்த தாய் சத்யாவதி, சரியாக சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

ஒருநாள் சத்யாவதி, ‛‛நான் உன்னுடனே இருக்க வேண்டும்.. எங்கு போனாலும் என்னையும் அழைத்து செல்.. வீட்டில் தனிமையில் இருக்க பிடிக்கவில்லை. உன்னை பற்றிய கவலை அதிகம் இருக்கிறது.” என்று தனது மகன் கோபியிடம் சொல்ல....

சத்யாவதியை உற்சாகப்படுத்த ஒரு நாள் அவரை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார் கோபி. அந்த பயணம் எல்லாவற்றையும் மாற்றியது என்று கூறும் கோபி, ஆட்டோவில் வரும்போது தாயின் முகத்தில் தெரியும் இனம்புரியாத மகிழ்ச்சியை கண்டு ரசிக்க ஆரம்பித்ததாக தெரிவிக்கிறார்.

அன்று தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தனது மகன் கோபியின் ஆட்டோவில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணம் செய்கிறார் சத்யாவதி.

ஆந்திரா
தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் பீகார் மக்கள் சேர்ப்பா? உண்மையில் என்னதான் நடக்கிறது?

அது அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வதாக இருந்தாலும் சரி அல்லது வழக்கமான தினசரி பயணமாக இருந்தாலும் சரி. ’இதனால், சில பயணிகளை இழக்கிறேன் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் தனக்கு கவலையில்லை . தாயின் முகத்தில் தெரியும் புன்னகை ஒன்றே போதும்’ என்று கூறுகிறார் கோபி..

இதுகுறித்து தாய் சத்யாவதியும் தெரிவிக்கையில், "என் கணவர் இறந்த பிறகு, நான் உடைந்து போனதாக உணர்ந்தேன். ஆனால், என் மகனுடன் அமர்ந்திருக்கும்போது, நான் மீண்டும் வலிமையாக உணர்கிறேன். நான் ஒரு நாள் வீட்டில் இருந்தாலும்கூட நான் பலவீனமாக உணர்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த கோபி, "நான் மிகவும் கவனமாக சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டேன் என்று என் தாய் கூறுகிறார். இப்போது என் முறை . அவர் வர விரும்பும் வரை, அவருக்கு எப்போதும் என் ஆட்டோவில் இருக்கை இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

தாய் மகனின் பாசப்பிணைப்பு கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com