\
மத்தியப் பிரதேசத்தில் ஆட்டோ பஸ் மோதி பயங்கர விபத்து: 12 பெண்கள் பலி

மத்தியப் பிரதேசத்தில் ஆட்டோ பஸ் மோதி பயங்கர விபத்து: 12 பெண்கள் பலி

மத்தியப் பிரதேசத்தில் ஆட்டோ பஸ் மோதி பயங்கர விபத்து: 12 பெண்கள் பலி
Published on: 

இன்று காலை மத்திய பிரதேசத்தின் குவாலியரில், ஆட்டோ ரிக்‌ஷா மீது வேகமாக வந்த பேருந்து மோதியதில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை 7 மணியளவில் பழைய சவ்னி பகுதியில் 'அங்கன்வாடி கேந்திரத்தில்' சமையல்காரர்களாக பணியாற்றும் பெண்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குவாலியர் எஸ்.பி. அமித் சங்கி கூறுகையில், “எட்டு பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றவர்கள் மருத்துவமனையில் பலியானார்கள்” என தெரிவித்தார்

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ .50,000 இழப்பீடும் மாநில அரசு அறிவித்துள்ளது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com