”மோடி அரசால் நாட்டைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டேன்” - ஆஸி. பெண் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், 'தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன்' எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவனி தியாஸ்
அவனி தியாஸ்ட்விட்டர்

ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்தின் தெற்காசிய பணியகத் தலைவராக இருப்பவர், அவனி தியாஸ். இவர், அந்நிறுவனத்துக்காகக் கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதை எல்லை மீறிய செயல் என கூறி அவரது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்துசெய்தது. இதனால், அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஏ.பி.சி. நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள நிஜார் கொலை குறித்த வீடியோவை இந்தியாவில் தடை செய்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் அவனி தியாஸ், ‘கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. ’நிஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல்’ எனக் கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. லோக்சபா தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது’ என அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மாங்கல்யம் சர்ச்சை பேச்சு| பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!

அவனி தியாஸ்
"கச்சத்தீவு; தமிழக மீனவர் பிரச்னைக்கு பாஜகவே காரணம்" - வரலாற்றை விளக்கும் பத்திரிகையாளர் அய்யநாதன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com