HEADLINES
HEADLINES pt

HEADLINES|இன்று அமலாகுமா 25% வரி விதிப்பு முதல் ஸ்டாலினை சந்தித்த OPS வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இன்று அமலாகுமா 25% வரி விதிப்பு முதல் ஸ்டாலினை சந்தித்த பன்னீர்செல்வம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • ட்ரம்பின் அறிவிப்புப்படி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான 25 விழுக்காடு வரி விதிப்பு இன்று முதல் அமலாகுமா?. நாட்டு நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் உறுதி.

  • இந்திய பொருளாதாரம் இறந்து கிடப்பது பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேட்டியை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்.

  • ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு ஆதரவான பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றச்சாட்டு. ட்ரம்பின் கருத்தை எதிரொலிப்பது இந்திய மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் கண்டனம்.

  • நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவத் திட்டத்திற்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு. அரசுத் திட்ட விளம்பரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவும் அறிவுறுத்தல்.

  • 16 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த திமுக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கச்சத்தீவை திரும்பப் பெறாதது ஏன்?.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.

  • ஒரேநாளில் அடுத்தடுத்து இரண்டு முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என பேட்டி.

  • முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவிப்பு.

  • திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி. வடமாநில இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள்.

  • கவினும் நானும் உண்மையாக காதலித்தோம். பெண் கேட்க வருமாறு கவினை, சுர்ஜித் அழைத்ததாக கவினின் காதலி வீடியோ வெளியிட்டு விளக்கம்..

  • நெல்லை கவின் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி. வழக்கின் ஆவணங்களை பெற்றுக் கொண்ட நிலையில் கொலை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு.

  • ரிதன்யா தற்கொலை வழக்கில் தடயவியல் அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. பிரேத பரிசோதனை அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லை என நீதிபதி அதிருப்தி..

  • 1

  • 11,169 கோடி ரூபாய் மதிப்பிலான 4 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, ஜார்க்கண்டிற்கு ரயில்வே திட்டங்கள்.

  • ஹைதராபாத் தனியார் பள்ளியில் மழலையர் வகுப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பது அம்பலம். சமூக வலைதளங்களில் வைரலாகும் கட்டண விவர புகைப்படம்.

  • கொல்கத்தாவில் வங்கதேச நடிகை சிறப்பு அதிரடிப் படையினரால் கைது. போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தது அம்பலம்.

  • இங்கிலாந்து உடனான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றம். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவிப்பு; கருண் நாயர் அரைசதம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com