மு.க.ஸ்டாலின், ராகுல்
மு.க.ஸ்டாலின், ராகுல்எக்ஸ் தளம்

HEADLINES|விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முதல் ராகுலின் பேரணியில் பங்கேற்கும் முதல்வர் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, இன்று முதல் அமலுக்கும் வரும் அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு முதல் ராகுல்காந்தியின் வாக்குரிமை பேரணியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் வரை விவரிக்கிறது.
Published on
Summary

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் இன்று முதல் அமலுக்கும் வரும் அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு முதல் ராகுல்காந்தியின் வாக்குரிமை பேரணியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் வரை விவரிக்கிறது.

  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யப்படுகின்றன. சென்னையில் 1,519 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் செல்கிறார்.

  • நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும், சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • ஜம்மு - காஷ்மீரில் கனமழை, வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாதா வைஷ்ணோவ் தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • மாருதி சுசுகியின் முதல் மின்சார காரை குஜராத்தில் அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி, ’முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்கள் முனைப்பு காட்ட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

  • சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதால் எழுந்த சர்ச்சையால், எவருக்கேனும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

  • இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25 விழுக்காடு கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

  • சீனாவை அழிக்க முடியும்... ஆனால் அதை செய்ய மாட்டேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  • கோவாவில் செஸ் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மு.க.ஸ்டாலின், ராகுல்
பீகாரில் புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி.. ‘வாக்காளர் உரிமைப் பயணம்’ இன்று ஆரம்பம்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com