HEADLINES |6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை முதல் கேரளாவிற்கு வரும் மெஸ்ஸி வரை!
புதிய தலைமுறை நேயர்களுக்கு இனிய காலை வணக்கம்... உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் அங்கம் ஆகியிருக்கும் புதிய தலைமுறை, இன்றுடன் 15 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 14 ஆண்டுகளாக உங்கள் கரம்பிடித்து நடந்து வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, உங்களோடு, உங்கள் ஆதரவோடு தனது பயணத்தை தொடர்கிறது. இந்த இனிமையான தருணத்தில், பிரதான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்..
இன்றைய தலைப்பு செய்திகள்..
தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு
மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை
ஆய்வு மையம் கணித்துள்ளது.டெல்லி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.
ராஜஸ்தானை புரட்டிப் போட்ட கனமழை, சாலைகள், விளைநிலங்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் என வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கனமழை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.
மாநிலம் அளிக்கும் வரி வருமானத்திற்கு ஏற்ப நிதிப் பங்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை. உரிய நிதிப் பகிர்வை தராமல் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மதுரை மாநாடு வெற்றி என தொண்டர்களுக்கு விஜய் கடிதம், மக்களாட்சியை நிலைநாட்டுவதே இலக்கு என்றும் திட்டவட்டம்.
தவெக மாநாட்டில் கருத்தியல் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.. அரைத்த மாவையே விஜய் அரைப்பதாகவும் விமர்சனம்.
சென்னையில் மழையின்போது மின்சாரம் தாக்கி இறந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி... உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல்....
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு திருமாவளவன், சீமான், தமிழிசை உள்ளிட்டோர் ஆறுதல்.. மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு நேரிட்டதாக தலைவர்கள் கண்டனம்..
மேகதாது அணையை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்.. அணையால் இரு மாநில விவசாயிகளுமே பயன்பெறுவார்கள் என கருத்து..
2026 ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்.... இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்...
மயிலாடுதுறையில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்... காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
வரும் நவம்பர் மாதம் கேரளாவில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி விளையாடுவதாக அம்மாநில அமைச்சர் அறிவிப்பு... எதிர்த்து விளையாட ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 அணிகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்...
சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு மீண்டும் சறுக்கல்.... இறுதி ஆட்டத்தில் அல்-ஆலி அணியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோல்வி அடைந்த அல்-நசார்..
ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது இந்தியா.. அமெரிக்காவின் புதிய சுங்க விதிகளால் சேவை நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை தகவல்..
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழப்பு... உணவுக்காக காத்திருந்தவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்...