நான் ஒன்றும் ராஜா கிடையாது - புதுச்சேரி முதல்வர்

நான் ஒன்றும் ராஜா கிடையாது - புதுச்சேரி முதல்வர்

நான் ஒன்றும் ராஜா கிடையாது - புதுச்சேரி முதல்வர்
Published on

மழை நிவாரணம் கேட்ட நபரிடம், தான் ஒன்றும் ராஜா கிடையாது, தனக்கு மேலும், கீழும் அமைச்சர்கள் உள்ளனர் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் மழை நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்த நிலையில், இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிவாரணம் வழங்கக்கோரி, காரைக்காலைச் சேர்ந்த நபர், முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மழை நிவாரணம் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ரங்கசாமி, தான் மட்டும் ராஜாவாக இருந்தால் பரவாயில்லை தனக்கு மேலும், கீழும் அமைச்சர்கள் உள்ளனர் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com