அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு - தீ விபத்து நடக்க என்ன காரணம்?

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயரிழந்துள்ளனர். 8 இருசக்கர வாகனம், ஒரு லாரி, இரண்டு சரக்கு வாகனம் எரிந்து நாசம் .
அத்திப்பள்ளி
அத்திப்பள்ளிPT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி மற்றும்  கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. இது மட்டுமின்றி தீபாவளி நேரங்களில் தற்காலிகமாக உரிமை பெற்று இருந்த பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருவது வழக்கம் அந்த வகையில அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது.  

இந்த கடையில் பட்டாசுகளை வாகனத்தில் இருந்து கீழே இறக்கிக் கொண்டிருந்த பொழுது  திடீரென பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அருகில் இருந்து மதுபான கடைகள் உள்ளிட்ட நான்காவது கடைகளுக்கும் திடீரென பரவியதால் தீயானது மளமளவென கொழுந்து விட்டு எறிய துவங்கியது. 

இதை அடுத்து உடனடியாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 12 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை 5 மணி நேரம்  போராடி அனைத்து வந்தனர்.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதால் இரு மாநிலங்களிடையே கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் இங்கும் அங்கும் வெடித்து சிதறி தீ கொழுந்து விட்டு தொடர்ந்து எரிந்து வருவதால் அருகில் மக்கள் யாரும் செல்ல இயலாத சூழ்நிலை உள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருவதுடன் பொது மக்களையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.இந்த கடையில் சுமார் 28 பேர் பணிபுரியபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது 

மீட்பு பணீ
மீட்பு பணீPT

இந்த தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் மீது ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில் தீயில் கருகி 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் என 13 உயிரிழந்துள்ளனர். மேலும் தீ அணைப்பு துறை, போலீசார், மருத்துவ குழுவினர் ஆகியோர் மீதம் உள்ள நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை தற்போது 14 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அருகில் இருந்த லாரி, 8 இருசக்கர வாகனங்கள், 2 சரக்கு வாகனம்  உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் மற்றும் கடைகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இதில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்து காரணமாக இரு மாநிலங்களிடையே தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com