பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சியை இணைக்க சதி.. சந்திரசேகர ராவ் மகள் பகீர் குற்றச்சாட்டு!
மாநில அளவிலும் தேசிய அளவிலும் பி. ஆர்.எஸ். கட்சியை துணையாக பயன்படுத்த பா.ஜ.க.வில் சதி நடக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், தான் ஒரு பொழுதும் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் கவிதா தெரிவித்தார்.
தெலங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி எப்போதும் தனித்து நிற்கும் என்றும் கூறினார். பாஜக உடன் எந்த உடன்பாடும் இல்லையென உறுதியளிப்பதாகவும், மக்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கவிதா கேட்டுக்கொண்டார்.
பா.ஜ.க. - பி.ஆர்.எஸ். இணைப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அண்மையில், சந்திரசேகர ராவை சாத்தான்கள் சூழ்ந்திருப்பதாக கவிதா கடிதம் எழுதியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி மதுபான ஊழல் தொடர்பான புகாரில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது.