'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் MLAக்களிடமே பணம் சுருட்ட முயன்ற நபர்..!

புதுச்சேரியில் அமலாக்கத்துறை அதிகாரி எனக் கூறி காங்கிரஸ், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்குச் சென்று சோதனை நடத்திய நபரை கையும்,களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரத்தின் வீடு கருவடிக்குப்பம் பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர், தான் அமலாக்கத்துறை அதிகாரி என்றும் சோதனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியுள்ளார்,

fake ed officer
fake ed officerpt desk

இதைத் தொடர்ந்து லாஸ்ட் பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் இல்லத்திலும் அதனைத் தொடர்ந்து உழவர் கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் இல்லத்திலும் சோதனை நடத்தியுள்ளார். இதனிடையே சிவசங்கர் இல்லத்தில் இருந்த அவரது ஆதரவாளர்கள் சந்தேகமடைந்து அவரை மிரட்டி விசாரித்துள்ளனர்.

அப்போது அவர், போலி அதிகாரி என ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com