\
சிறை அருகே சசிகலா தரப்பு வாகனங்கள் மீது தாக்குதல்

சிறை அருகே சசிகலா தரப்பு வாகனங்கள் மீது தாக்குதல்

சிறை அருகே சசிகலா தரப்பு வாகனங்கள் மீது தாக்குதல்
Published on

பெங்களூருவில் சசிகலா சென்ற காருடன் சென்ற கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி உடைந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைவதற்காக சென்ற போது இந்தத் தாக்குதல் நடந்தது.

சசிகலாவிற்கு உடைகள் கொண்டு வந்த கார் மீது திடீரென்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. சசிகலாவுடன் வந்த தமிழக பதிவெண் கொண்ட மேலும் 4 கார்கள் மீதும் ஏறிய சிலர் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனால் காரின் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com