'பசுக்காவலர் என்ற பெயரில் தாக்குவது இந்துத்துவாக்கு எதிரானது'- மோகன் பகவத்

'பசுக்காவலர் என்ற பெயரில் தாக்குவது இந்துத்துவாக்கு எதிரானது'- மோகன் பகவத்
'பசுக்காவலர் என்ற பெயரில் தாக்குவது இந்துத்துவாக்கு எதிரானது'- மோகன் பகவத்

பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவுக்கு எதிரானது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மோகன் பகவத், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் தங்களை இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியற்றவர்கள் எனக் கூறினார். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்சத்தை சிலர் உருவாக்க நினைப்பதாக குற்றஞ்சாட்டிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அதுபோன்ற தவறான பரப்புரையில் முஸ்லீம்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்து விடக்கூடாது என கூறிய மோகன் பகவத், இரு மதங்களுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என தெரிவித்தார். ஜனநாயகத்தை போற்றும் நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணமே மனதில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com