இந்தியா
விரைவில் ரயில் நிலைய நடைமேடையில் ஏடிஎம்கள்..... ரயில்வே திட்டம்
விரைவில் ரயில் நிலைய நடைமேடையில் ஏடிஎம்கள்..... ரயில்வே திட்டம்
கூடுதல் வருவாய் திரட்டும் வகையில், ரயில் நிலைய நடைமேடைகளில் ஏடிஎம் அமைக்க அனுமதிக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே திட்டங்களுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்கான வழிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் ரயில்வே வாரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ரயில் நிலையங்கள், ரயில்கள், கடவுப் பாதைகள், மேம்பாலங்களில் விளம்பரம் செய்ய அனுமதிப்பதன் மூலம் கணிசமான வருவாய் திரட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரயில் நிலைய நடைமேடைகளில் வங்கிகளின் 2 ஆயிரம் ஏடிஎம்களை அமைக்க 10 ஆண்டுகள் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.